Thursday, February 19, 2009

எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப்பாடம் - அறிமுகம்

தமிழ் இலக்கியப் பாடம் பல்லாண்டுகாலமாக மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வில் ஒரு பாடமாக இருந்து வருகிறது. இதற்கான பாடநூல்கள் மலேசியத் தேர்வு வாரியத்தால் (LPM) அவ்வப்போது பரிந்துரைக்கப்பட்டு எல்லா மாநிலக் கல்வி இலாகாவுக்கும் அறிவிக்கப்படும். இப்பாடத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க இதழ் ஒன்றினை மலேசியத் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியப்பாடத்தின் மதிப்பீட்டு நோக்கம்

தமிழ் இலக்கியப் பாடத்திற்கு மலேசியத் தேர்வு வாரியம் ஏழு மதிப்பீட்டு நோக்கங்களை வரையறுத்துள்ளது. இந்த நோக்கங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். எனவே, இதனைப் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் தங்கள் கற்றல் கற்பித்தலலை நடத்த வேண்டும். அதற்கு உறுதுணை செய்யும் வகையில், மதிப்பீட்டு நோக்கங்களைப் பற்றிய விளக்கம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
  1. நாவல், சிறுகதை, நாடகம், கவிதை ஆகியவற்றுள் காணப்படும் கருப்பொருள், கருத்துகள் ஆகியவற்றை வெளிப்படுத்ததி விளகுதல்.
  2. படைப்புகளில் உள்ள கதைப்பின்னல், துணைக் கதைப்பின்னல், நிகழ்வுகளின் நிரல், புதைநிலை கருத்து, தெரிநிலை கருத்து ஆகியவற்றை அடையாளங்கண்டு விளக்குதல்.
  3. கதைப்பாத்திரம், கதைப்பாத்திரப்படைப்பு மற்றும் அவற்றிக்கிடையிலான தொடர்பு பற்றி ஆராய்ந்து விளக்குதல்.
  4. படைப்பிலக்கியங்களில் உள்ள காலப்பின்னணி, இடப்பின்னணி, சமுதாயப்பின்னணி ஆகியவற்றின் பங்கினை விளக்குதல்.
  5. படைப்பாளிகளின் நோக்குநிலை மற்றும் உளப்பாங்கினை விளக்குதல்.
  6. படைப்பிலக்கியாங்களைத் திறனாய்வு செய்து அவற்றின் தரத்தை மதிப்பிடுதல்; கருத்துரைத்தல்.
  7. தமிழ்க்கதையின் நயங்கள் அல்லது தமிழ்க்கவிதையின் கூறுகளை அடையாளம் காணுதல்; விளக்கிக் கூறுதல்.

நன்றி, தேர்வு வாரியம், மலேசியா


No comments:

Post a Comment