நேரம் : 2 மணி 30 நிமிடம்
நேர ஒதுக்கீடு : பாகம் ஒன்றுக்கு 1 மணி நேரத்தையும், பாகம் இரண்டுக்கு 1 மணி 30 நிமிட நேரத்தையும் ஒதுக்கி விடையளிக்க முயல்வது நலம்.
வினாக்களுக்கான பிரிவுகளும் புள்ளிகளும்
பாகம் I - [40 புள்ளி]
பிரிவு 1 : நாவல் (14 புள்ளி)
பிரிவு 2 : நாடகம் (14 புள்ளி)
பிரிவு 3 : கவிதை (12 புள்ளி)
பாகம் II - [60 புள்ளி]
பிரிவு 1 : நாவல் (20 புள்ளி)
பிரிவு 2 : நாடகம் (20 புள்ளி)
பிரிவு 3 : கவிதை (20 புள்ளி)
பாகம் I (கேள்விகளின் அமைப்பு)
பிரிவு I (நாவல்) & பிரிவு II (நாடகம்)
மேற்காணும் ஒவ்வொரு பிரிவிலும் 2 கேள்விகள் கேட்கப்படும். ஒரு பிரிவில் ஒரு கேள்விக்கு மட்டும் விடையளிக்க வேண்டும்.
கேள்வி (அ):
நாவல் / நாடகம் தொடர்பான இலக்கியக் கூறுகள் பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்படும் (Komsas) கலைச்சொற்கள் தொடர்புடையது) இக்கேள்விகளுக்கு ஒரே வரியில் / ஒரே சொல்லில் விடை எழுதினால் போதும்.
[1 புள்ளி]
கேள்வி (ஆ):
நாவல் / நாடகத்தைப் பற்றிய பொதுவான கேள்வி ஒன்று கேட்கப்படும். பெரும்பாலும் இரண்டு விடைகளையுடையதாக இருக்கும். விடை சுருக்கமாக, இரண்டு சொற்களில் / வரிகளில் இருந்தால் போதும்.
[2 புள்ளி]
கேள்வி (இ):
நாவல் / நாடகம் (கதையை) ஒட்டிய ஒரு கருத்துணர்க் கேள்வி இடம்பெறும். (ஏன், எதற்கு, எவ்வாறு, என்ன, காரணம் என்பதன் கேள்வி) இதற்கு விடை சுருக்கமாக 5-ல் இருந்து 8 வரிகளில் இருந்தால் போதும்.
[4 புள்ளி]
கேள்வி (ஈ):
ஒரு சிறு பகுதி கொடுக்கப்படும். "இப்பகுதி பெரும்பாலும் ஒரு கதைப்பாத்திரத்தின் பேச்சிலிருந்து (dialog) எடுக்கப்பட்டதாக இருக்கும். அதனையொட்டி 2 வினாக்கள் கேட்கப்படும்.
கேள்வி (ஈ) (i):
யார் யாரை நோக்கிக் கூறியது? எனும் (வழக்கமான) கேள்வியாகவோ, கொடுக்கப்பட்ட பகுதியோடு கதைப்பாத்திரங்கள் யாவர்? எனும் கேள்வியாகவோ, பகுதியில் இடம்பெறுகிற "நீ" மற்றும் "நான்" என்பவர்கள் யாவர்? எனும் கதைப்பாத்திரங்களை அடையாளங்காணுகிற கேள்வியாகவோ அமையலாம். விடை இரண்டு சொற்களில் அல்லது ஒரு வரியில் அமைந்திருந்தால் போதும்.
[2 புள்ளி]
கேள்வி (ஈ) (ii):
கொடுக்கப்பட்டுள்ள பகுதி இடம்பெற்ற (முன்) சூழலை; விவரிக்கச் சொல்லும் (வழக்கமான) கேள்வியாகவோ, கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குப் பிறகு நேர்ந்திருக்கும் (பின்) சூழலை விவரித்து எழுதும் கேள்வியாகவோ அமையலாம். இக்கேள்விக்கு 6-ல் இருந்து 10 வரிகளில் விடை எழுதினால் போதும்.
[5 புள்ளி]
பிரிவு 3 (கவிதை)
கொடுக்கப்பட்டுள்ள கவிதையின் பகுதியை வாசித்து அதனடியில் காணப்படும் கேள்விகளுக்குச் சுருகமான விடை எழுத வேண்டும்.
கேள்வி (அ):
கவிதையின் பாடுபொருள் (கருப்பொருள்) பற்றி கேட்கப்படும். ஒரே வரியில் விடை எழுதுதினால் போதும்.
[1 புள்ளி]
கேள்வி (ஆ):
கவிதை இயற்றிய கவிஞரைப் பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்படும். (பெயர், புனைப்பெயர், பட்டம், பெற்ற பரிசுகள் போன்ற ஏதாவதொரு விபரம் வினவப்படும்) இதற்கு ஒரு சொல்லில் அல்லது ஒரு வரியில் விடை எழுதினால் போதும்.
[1 புள்ளி]
கேள்வி (இ):
கொடுக்கப்பட்ட கவிதைக் கண்ணிகள் (1/2/3...) உணர்த்தும் கருத்தை விளக்கி எழுத வேண்டும்.
[4 புள்ளி]
கேள்வி (ஈ):
கவிதை இலக்கணம் (யாப்பு) மற்றும் அணிச்சிறப்புகள் தொடர்பான இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.
கேள்வி (ஈ) (i):
கொடுக்கப்பட்ட கவிதை வரிகளில் காணும் எதுகை - மோனை, சந்தம் போன்ற அடிப்படை யாப்பிலக்கணம் பற்றிய கேள்வி ஒன்று கேட்கப்படும். பெரும்பாலும் இரண்டு விடைகள் "ளிக்க வேண்டிய கேள்வியாக இஃது அமையும்.
[2 புள்ளி]
கேள்வி (ஈ) (ii):
கொடுக்கப்பட்ட கவிதை வரிகளில் காணும் சிறப்புகளைப் பற்றி வினவப்படும். "யாணியிலகணங்களான உவமை, உவமானம், உவமேயம், உருவகம், உயிரூட்டம், முரண், சொல்லாட்சி போன்ற ஏதாகிலும் ஒன்று அல்லது இரண்டு கவிதைக்கூறுகளை அடையாளங்கண்டு விளக்கி எழுத வேண்டும். 3-ல் இருந்து 5 வரிகளில் எழுதினால் போதும்.
[4 புள்ளி]
பாகம் II தொடர்பான விளக்கங்கள் விரைவில்...........
No comments:
Post a Comment