Tuesday, March 3, 2009

பாகம் II - வினாத்தாள் அமைப்பு


பாகம் II - 60 புள்ளிகள்
பிரிவு 1: நாவல் [20 புள்ளிகள்]
பிரிவு 2: நாடகம் [20 புள்ளிகள்]
பிரிவு 3: கவிதை [20 புள்ளிகள்]

மேற்காணும் ஒவ்வொரு பிரிவிலும் 2 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு கேள்வியாக 3 கேள்விகளுக்கு மட்டும் விடை அளிக்க வேண்டும்.

பிரிவு 1-லும், பிரிவு 2-லும் கருப்பொருள், கதைப்பின்னல், கதைக்களம், கதை மற்றும் காட்சியமைப்பு, காலப்பின்னணி, நோக்குநிலை, பண்புநலன், பாத்திரப்படைப்பு, கதையாசிரியர் (படைப்பாளி), கையாளப்பட்ட உத்திகள், கதைச்சுருக்கம், சொல்லாட்சி மற்றும் எழுத்து நடை, வர்ணனை, உவமானம், உவமேயம், உயர்வுநவிற்சி, அற்புதநவிற்சி, வஞ்சப்புகழ்ச்சி, இன்பியல்-துன்பியல் நிகழ்வுகள், சமுதாயச் சிந்தனைகள், திறனாய்வு, படிப்பினை போன்ற கூறுகள் பற்றிய கேள்விகள் அமையலாம். ஒவ்வொரு பிரிவிலும் 2 கேள்விகள் கேட்கப்படும். ஒரு பிரிவில் ஒரு கேள்விகள் மட்டுமே பதிலளிக்க வேண்டும்.

பிரிவு 3-இல் தேர்வுக்குரிய 14 கவிதைகளிலிருந்து 2 முழுக்கவிதைகள் கொடுக்கப்பட்டு அவற்றிற்கான கேள்விகள் வினவப்பட்டிருக்கும். ஒரு கேள்விக்கு மட்டும் விடை எழுத வேண்டும். கவிதையின் ஒட்டுமொத்த கருத்துகளை விளக்கும் வகையிலோ, கவிதையில் காணும் சிறப்புகளை விவரிக்கக் கோரும் வகையிலோ (உவமை, உவமானம், உவமேயம், உருவகம், சொல்நயம்-பொருள்நயம், முரண். சொல்லாட்சி, படிமம் (சொல்லோவியம்), அங்கதம், உண்ரவுத்தொனி, ஒப்புமை, முருகியல், பொருளணி, சொல்லணி) கேள்விகள் அமையும். கொடுக்கப்பட்ட கவிதை மாணவரிடம் ஏற்படுத்திய தாக்கம் அல்லது பாதிப்பைக் குறித்தோ அக்கவிதையைப் பற்றிய மாணவரின் கண்ணோட்டதைக் (திறனாய்வு) குறித்தோ கேள்விகள் அமையலாம்.

இதற்குத் தேர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எல்லாக் கவிதைகளையும் வாசித்துப் புரிந்திருத்தல் அவசியம். சொந்தக் கருத்தை விழையும் கேள்வியாக இருந்தால் கவிதையில் சொல்லப்பட்ட கருத்துகள் அடிபடையிலேதான் சொந்தக் கருத்தும் அமைந்திருக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை...

பாகம் II-கான விடைகள் (நேரத்தைக் கருத்ததில் கொண்டு) 1 முதல் 1½ பக்கம் வரை இருந்தாலே போதுமானதது. விடைகள் அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட நூல்களில் உள்ள கருத்துகளையே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வுக்கு முன்னதாகவே பரிந்துரைக்கப்பட்ட மூல நூல்களை முழுமையாக வாசித்திருப்பது அவசியம். குறிப்பாக எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பாட நூல்கள் பொன்விலங்கு நாவல் - 12ஆம் பதிப்பு 2002 அல்லது அதற்குப் பிந்திய பதிப்பு) / காவியநாயகி - மறுபதிப்பு 2005 / கவிதைப் பூங்கொத்து -பதிப்பு 1/2004 அல்லது அதற்குப் பிந்திய பதிப்பு) மட்டுமே தேர்வுக்குரிய நூல்களாக அமைந்திருப்பதால் மாணவர்கள் அந்நூலையே பயன்படுத்துவது நலம்.

கவிதையின் சிறப்புப் பற்றி எழுதுவதற்கு "கவிதைப் பூங்கொத்து" தொகுப்பில் விளக்கப்பட்டுள்ள "தமிழ்க்கவிதையின் கூறுகள்" (பக்கம் 80-105) பகுதிகளை மேற்கோளாகவும், மலேசியத தேர்வு வாரியத்தின் "எஸ்.பி.எம் தமிழ் இலக்கியக் கலைச்சொற் பட்டியல்" எனும் நூலை மேற்கோளாகவும் கொள்ளுதல் சிறப்பு.


அடுத்து நாவல் தொடர்பான தகவல்கள் தொடரும்...

1 comment:

  1. Vanakkam. Valga Thamil Valarga Thamil Ilakkiyam.Nalam nalamariya aaval.Intha valaippathivai erpaduthiya unggalukku yen inya nandri malargalai kanikkai aakkukiren.

    ReplyDelete