Friday, March 13, 2009

பாகம் II - இதுவரை கேட்கப்பட்ட நீண்ட கேள்விகள்

2007
பிரிவு ஒன்று : நாவல்

1. (அ) பொன் விலங்கு நாவலில் சத்தியமூர்த்தியின் பாத்திரப்படைப்பை ஆராய்க. (14 புள்ளி)

(ஆ) பொன் விலங்கு நாவலில் காலப்பின்னணியை விவரித்து எழுதுக. (6 புள்ளி)

2. பொன் விலங்கு நாவலின் வெற்றிக்கு எதிர்மறைப் பாத்திரங்களின் பங்களிப்பு மறுக்கவியலாது. அவ்வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எதிர்மறைப் பாத்திரங்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து எழுதுக.

(அ) கல்லூரி முதல்வர் (பிரின்ஸிபால்) (10 புள்ளி)
(ஆ) கண்ணாயிரம் (10 புள்ளி)

2008
1. பொன் விலங்கு நாவலின் வெற்றிக்குத் துணைப்பாத்திரங்களின் பங்கு அளப்பரியது. இந்நாவலின் வெற்றிக்குத் துணைநின்ற கீழ்க்காணும் துணைப்பாத்திரங்களின் பாத்திரப்பனடபை ஆராய்க.

(அ) பாரதி (10 புள்ளி)
(ஆ) குமரப்பன் (10 புள்ளி)

2. பொன் விலங்கு நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதுக. (20 புள்ளி)

பிரிவு ஒன்று : நாடகம்

1. காவிய நாயகி நாடகத்தில் பொன்னியின் பாத்திரப்படைப்பை ஆராய்க. (20 புள்ளி)

2. காவிய நாயகி நாடகத்தில் நாடகாசிரியர் கையாண்டிருக்கும் கீழ்காணும் உத்திகளைப் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி எழுதுக.

(அ) பின்னோக்கு நிலை (10 புள்ளி)
(ஆ) கதை கூறல் (10 புள்ளி)

2008
1. காவிய நாயகி நாடகத்தில் சேரமன்னனின் வீரச்சிறப்பப் போற்றுதற்குரியது. அந்த வகையில் சேரமன்னனின் பாத்திரப்படைப்பை ஆராய்க. (20 புள்ளி)


2. பொன் விலங்கு நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதுக. (20 புள்ளி)

(அ) பாரதி (10 புள்ளி)
(ஆ) குமரப்பன் (10 புள்ளி)


பிரிவு மூன்று : கவிதை
2007

1. கீழ்க்காணும் கவிதையின் வாயிலாகத் தமிழ்மாணவர்களுக்குக் கவிஞர் வலியுறுத்தவரும் கருத்து என்ன? (யார் தமிழ் படிப்பார்?)
கவிதை வரிகளை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு உமது விளக்கத்தை எழுதுக.

2. கீழ்க்காணும் கவிதையில் காணும் அதன் கருத்து, யாப்பு மற்றும் அணி ஆகிய சிறப்புகளை எடுத்துகாட்டுகளுடன் விளக்கி எழுதுக. (மாசக்தி)

2008

1. கீழ்க்காணும் கவிதையில் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
கவிதை வரிகளை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு உமது விளக்கத்தை எழுதுக. (காவியமும் ஓவியமும்)

2. கீழ்க்காணும் கவிதையிலுள்ள சிறப்புகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி எழுதுக. (பஞ்சு)

No comments:

Post a Comment