பயிற்சி 1
பாகம் 1- பிரிவு மூன்று (கவிதை : தமிழ்க்கவிதை)
துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும்
தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்டு
நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்டு
விரைவான வெற்றிகண்டால் பரணிப் பாட்டு
வீறுபெறு தமிழாநீ அச்சம் ஓட்டு!
மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!
மாத்தமிழர் வாழ்வெல்லாம் வாழும் பாட்டு!
அ. இக்கவிதையின் பாடுபொருள் என்ன?.(1 புள்ளி)
ஆ. மேற்காணும் கவிதையை இயற்றியவர் யார்?.(1 புள்ளி)
இ.
- "பரணிப்பாட்டு" எனும் சொல்லின் பொருள் யாது?. (1 புள்ளி)
- மேற்காணும் கண்ணியின் வாயிலாக்க் கவிஞர் வலியுறுத்தும் கருத்து யாது?. (3 புள்ளி)
ஈ.
- "இக்கவிதையில் வரும் எதுகை மோனையைக் குறிப்பிடுக?. (2 புள்ளி)
- இக்கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கும் அணிச்சிறப்புகள் இரண்டனைக் குறிப்பிடுக?. (4 புள்ளி)
பயிற்சி 1
மாதிரி விடை
அ. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வுகலந்த கலையாக்கமே தமிழ்க் கவிதை.(1 புள்ளி)
ஆ. க.பெருமாள்.(1 புள்ளி)
இ.
- போரில் பெற்ற வெற்றியை மகிழ்ந்து கொண்டாடிப் பாடும் செய்யுள்வகை. (1 புள்ளி)
- வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தொடங்கியதெல்லாம் வெற்றி பெறும் வகையில் உள்ளத்தில் வெளிச்சம் தரக்கூடியது கவிதை. நாம் கவிதையால் உணர்வு பெற்று வீறு கொண்டு அச்சத்தை ஒழிப்போம் என கவிஞர் உணர்த்துகிறார். பெறுமையும் சிறப்பும் மிக்க தமிழர்கள் வாழ்வில் எல்லா நிலைகளிலும் நிறைந்து வாழ்ந்துக் கொண்டிருப்பது கவிதையாகும். (3 புள்ளி)
ஈ.
- எதுகை
துறைதோறும் - நிறைவான (1 புள்ளி)
மோனை
எதுகையென்ன - எழுத்தசையும்(1 புள்ளி) - உவமை அணி
பூந்தாலாட்டு. (2 புள்ளி)
உருவக அணி
தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும். (2 புள்ளி)
(நன்றி. பகாங் மாநில இலக்கியப் பயிற்றி 1- பகாங் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழ்ப் பணித்தியம்.)
No comments:
Post a Comment