கவிஞர் க.பெருமாள் (மலேசியா) புனைந்த தமிழ்க்கவிதை என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்
- தலைப்பு
- தமிழ்க்கவிதை
- கவிஞர்
- க.பெருமாள் (கவியழகர்) - மலேசியா
- மையக்கரு
- வாழ்வோடு கலந்து நிற்கும் நிகழ்ச்சியின் உணர்வு கலந்த வெளிப்பாடே தமிழ்க்கவிதை
- யாப்பு வகை
- ஆசிரியப்பா
- அணிச்சிறப்புகள்
- இரட்டுறமொழிதல் / சிலேடை
உதாரணம் : - எழுத்தசையும் சீர்தலையும்.
உவமை அணி
உதாரணம்:
"ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க"
ஆழமான கடலிலிருந்து முத்து எடுத்த மகிழ்ச்சி போன்று
உதாரணம்:
"அமுதப் பாட்டு"
அமுதம் போன்ற பாட்டு
உதாரணம்:
"யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்
இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்"
கவிதையின் சுவையானது யாழ் மற்றும் குழலின் இசையைப் போன்றது.
உருவக அணி
உதாரணம்:
"தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்"
கவிதை ஒளியைப் பாய்ச்சும் விளக்காக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)
No comments:
Post a Comment