கவிஞர் பொன்முடி (மலேசியா) புனைந்த யார் தமிழ் படிப்பார் என்ற கவிதையில் காணப்படும் சிறப்புகள்
- தலைப்பு
- யார் தமிழ் படிப்பார்
- கவிஞர்
- பொன்முடி(இயற்பெயர் : திரு.சுப்பிரமணியம்) - மலேசியா
- மையக்கரு
- மாணவர்கள் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்க்கல்வி பயில்வது தொடர்ந்தால்தான் நம் நாட்டில் தமிழ் வளரும்.
- யாப்பு வகை
- ஆசிரியப்பா
- அணிச்சிறப்புகள்
- உருவக அணி
உதாரணம்:
"தமிழ்மொழித் தேனே"
தமிழ் மொழி தேனாக உருவகம்.
உதாரணம்:
"தாய்நலங் காப்பது சேய்கடன் தானே"
தமிழ் தாயாக உருவகம்.
உதாரணம்:
"தொடக்கப் பள்ளியில் தோளில் சுமந்ததை
இடைநிலைப் பள்ளியில் இறக்கி வைப்பதா"
தமிழ்மொழி, சுமக்கப்பட்டு பின் இறக்கி வைக்கப்பட்டதொரு பொருளாக உருவகம்.
உதாரணம்:
"தாயா அருமைச்சேயினுக் கெதிராய்த் தீயாய் மாறித் தீய்க்க
முனைவாள்"
தமிழ் தாயாக உருவகம்.
உவமை அணி
உதாரணம்:
"பொற்றதாயைப் பிள்ளை மறுப்பது"
தாய் மொழியை மறுப்பது தாயை மறுப்பதைப் போன்றது.
உதாரணம்:
"உற்ற தாய் அன்பினை உதறிப் போவது"
தமிழ்ப்பற்றை உதறிப் போவது தாயன்பை உதறிப் போவதைப் போன்றது.
உதாரணம்:
"சொந்தம் என்று வந்த பந்தம் சோறு போடுமா"
தமிழ்மொழி சோறு போடுமா என்று கேன்பதைப் போன்றது.
உதாரணம்:
"இமயச் செயல்"
இமயம் போன்ற உயர்ந்த செயல்.
(நன்றி. எஸ்.பி.எம் தமிழ் இலக்கிய வழிகாட்டி, ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகம்)
No comments:
Post a Comment