கவிஞர் பொன்முடி (மலேசியா) - அவரைப் பற்றிய சிறு குறிப்பு
(இயற்பெயர் : சுப்பிரமணியம்)
(இயற்பெயர் : சுப்பிரமணியம்)
- பிறப்பு
- 27-11-1939
- கல்வி / தொழில்
- இடைநிலைக் கல்விபெற்று, 1959-1971 வரை ஆசிரியராகவும், 1972-1994 வரை தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
- துறைகள் / திறன்கள்
- கவிதை, உரைவீச்சு, கட்டுரை
- பணிகள்
- மணிமன்ற அமைப்பாளராகவும்; திருமணத் துணைப் பதிவதிகாரியாகவும்; ஆலயத் தலைவராகவும்; ம.இ.கா. கிளையில் பல பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழ்மொழி சிறப்புப் பயிற்றுநராகவும்; மாவட்டக் கல்விப் பொறுப்பாளராகவும்; புதிய பாடத்திட்டக் குழு, பாட நூல் ஆக்கக் குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைப் பயிலரங்குகளும் சமய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியுள்ளார்.
- படைப்புகள்
- 35 ஆண்டுகளாக எழுதுபவர். கவிதை, சிறுவர் கவிதை, சிறுவர் இலக்கியம் என இவர் எழுதி வெளியானவை 16 நூல்கள்.
- புனைப்பெயர்
- பொன்முடி.
- விருதுகள் / பரிசுகள்
- PJK, ASA அரசவிருதுகளைப் பெற்றவர். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தங்கப் பதக்கம், இலக்கியக் கழகத்தின் குழந்தை எழுத்தாளர் விருது, கவிதை மாநாட்டில் தங்கப் பதக்கம் ஆகியவற்றுடன் பல அமைப்புகளின் இலக்கியப் பரிசுகளும் பெற்றுள்ளார்.
(நன்றி. கவிதைப் பூங்கொத்து நூலின் தொகுப்பாசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது)
No comments:
Post a Comment